திருமயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான ரகுபதி இரவுபகலாக பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தொகுதியில் பொன்னமராவதி,  ஒன்றியத்தில் அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி ஒன்றியத்தில் காரையூர் ஊராட்சியில் வெள்ள குடி, ஆதிதிராவிடர் காலனி, சங்கரம்பட்டி, கலைஞர் காலனி, மாங்காளிப்பட்டி, பிடாரி கோவில், பள்ளிவாசல், கீழத்தானியம் ஊராட்சியில் ராமலிங்கபுரம், உப்பிலிப்பட்டி சம்பபட்டி, இடையபட்டி உள்ளிட்ட 68 கிராமங்களில் வாக்கு சேகரித்தார் வாக்காளர்களிடம் பேசுகையில்

தேர்தல் களம் எங்களுக்குப் பிரகாசமாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகாலத்திலே  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியிலே தமிழ்நாடு பெற்றிருக்கிற நன்மைகளை பொதுமக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் சென்றிருக்கிற இடமெல்லாம் கிடைக்கின்ற வரவேற்பைப் பொறுத்து நன்றாக எங்களுக்குத் தெரிகிறது. . திமுக ஆட்சி வெறுப்பு கிடையாத ஒரு ஆட்சி. எனவே வெறுப்பில்லாத ஆட்சி வெற்றி பெறுவது உறுதி என்பது நாடறிந்த உண்மை. எனவே அந்த வகையிலேயும் எங்களுடைய தலைவர் சாதனைகளும் நிச்சயமான வெற்றியை எங்களுக்குத் தரும்.

எதிர்க்கட்சிகளுடைய விமர்சனங்கள் எல்லாம் புஸ்வாணங்கள். அது எல்லா மக்களுக்கும் தெரியும்.  முன்னாள் முதலமைச்சர் கலைஞர். கருணாநிதி அதிமுக  ஆட்சியிலதானே இறந்தார்? அப்ப யாரு முதலமைச்சர்? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர். அப்ப அவருக்கு ஆளத் தெரியல. ஆளத் தெரிஞ்சிருந்தா அன்னைக்கே அதெல்லாம் சொல்லிருக்கலாம். இன்றைக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்தருக்கு ஞானோதயம் வந்தது போல இன்றைக்கு எடப்பாடிக்கு ஒரு ஞானோதயம் வந்திருக்கிறது. தலைவர் கலைஞரை வீட்டுச் சிறையிலே வைக்கக்கூடிய தைரியம் எந்த தமிழனுக்கும் கிடையாது. சிறைகளைக் கண்டு அஞ்சாத சிங்கம் தலைவர் கலைஞர் என்பதை பாளையங்கோட்டை தனிச்சிறையிலே இருந்து  வெளியே வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. எனவே அவரை வந்து சிறையில வச்சாங்கன்னு சொல்றது போல எடப்பாடி பழனிசாமியைப் போல ஆளத் தெரியாத ஒரு ஆள் இந்த உலகத்தில் இருந்திருப்பதற்கான வாய்ப்பே கிடையாது. ஆட்சித்திறமை அற்றவர் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். எனவே அவர் கையிலதானே அன்னைக்கு போலீஸ் இலாக்கா எல்லாம் இருந்துச்சு? அப்படி இருந்தா உடனே அன்னைக்கே பப்ளிசிட்டி பண்ணிருக்கலாம்ல? அத்தனை பேரும் போய் கலைஞரைப் பார்த்து வருகிறார்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்த்து வருகிறார்கள், டெல்லியிலிருந்து வருகிறவர்கள் பார்க்கிறார்கள். எல்லோரும் பார்க்கக்கூடிய தலைவராக கலைஞர் இருக்கிற பொழுது அவரை யார் வீட்டுச் சிறையிலே வைக்க முடியும்? வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தேர்தலுக்காகப் புளுகுற புளுகு. இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் அவரைப் பற்றி ஒன்று புரிந்து கொள்வார்கள், அவர் சொல்லுகிற பொய்யிலிருந்தே அவர் ஆளுகிற தன்மையை இழந்துவிட்டார். ஆட்சி அதிகாரம் அவர்களிடத்திலே போனால் டிவியில பார்த்துத் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன செய்திகளைப் போல இன்றைக்குச் செய்திகளை எல்லாம் அவர் பரப்புவார்.

பாஜகவினரின் பிரச்சாரங்களை எல்லாம் எங்களாலே சுலபமாக எதிர்கொள்ள முடியும். அவங்க வந்து டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காங்க? தமிழ்நாடு எவ்வளவு ரூபாய் பணம் வரிக் கட்டியிருக்கு? அதுக்கு எவ்வளவு திருப்பிக் கொடுத்தாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா? ஒரு ரூபாய் கொடுத்தா 29 பைசா திருப்பிக் கொடுத்து தமிழ்நாட்டுக்கு வர்றாங்க. உத்தரப் பிரதேசத்துக்கு ஒரு ரூபாய் கொடுத்தா ரெண்டே முக்கால் ரூபாய் கொடுக்கிறாங்க. மத்தியப் பிரதேசத்துக்கு ஒரு ரூபாய் கொடுத்தா ஒன்றே முக்கால் ரூபாய் கொடுக்கிறாங்க. இப்படி பல மாநிலங்களுக்குக் கொடுப்பதை விட அதிகப்படுத்தி விட்டு நம்மிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கிக் கொண்டு 29 பைசா தந்து விட்டு இங்கே எந்த முகத்தோடு வருகிறார்கள் அவர்கள்? 50 பைசா தாங்கன்னு கேட்டா அதையே தர வக்கில்லாதவர்கள், அவர்கள் வந்து என்ன இங்கே கிழிக்கப் போறாங்க தமிழ்நாட்டுக்காக? நிச்சயமாக அவர்களாலே தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பது தமிழ்நாடு அறிந்த உண்மை.

இந்த தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றியடைவோம். மக்கள் மத்தியில் மிகப் பிரமாதமான வரவேற்பு இருக்கிறது. அதைச் செல்லுகிற இடங்களிலெல்லாம் நாங்களும் பார்க்கிறோம், நீங்களும் பார்க்கிறீர்கள். மக்கள் இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், திமுக அரசின் மீது மக்களுக்கு எந்தவிதமான வெறுப்பும் கிடையாது, அந்த அரசு எங்களுக்குப் பல்வேறு வகையிலும் உதவியாக இருந்திருக்கிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால், இன்றைக்குத் தமிழ்நாட்டிலே பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது, அதனாலே பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. அந்த உண்மையை மட்டும் ஏன் எதிர்க்கட்சிகள் எல்லாம் சொல்ல மறுக்கின்றன என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியை இன்றைக்கு உயர்த்திக் காண்பித்திருக்கிற அரசுதான் எங்களுடைய  முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அரசு.

 எங்களுக்கு எல்லாருமே களத்துல ஒன்னுதான். ஆனா நாங்க நம்பர் ஒன்.நான் வந்து என்னுடைய தொகுதியில்  அரசின் சார்பிலே என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எங்களுடைய சொந்த நிதியிலிருந்து மாணவ மாணவிகளுடைய கல்விக்காக ஆண்டுக்கு 25 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் ஒரு மாணவனுக்கு நாங்கள் கொடுப்போம், ஒரு கோடி ரூபாய் எங்களுடைய கல்வி அறக்கட்டளையிலிருந்து கொடுப்போம்னு சொல்லிருக்கேன். அதேபோல கழகத் தோழர்கள், அதேபோல கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இவர்களுடைய திருமண உதவியாக 25 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்சம் ஒரு 100-லிருந்து 200 குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றேன். அதேபோல முதியோர் இல்லம் கட்டித் தருவோம், மாணவியர் விடுதி கட்டித் தருவோம் போன்ற வாக்குறுதிகள் எல்லாம் தந்திருக்கின்றேன். எங்களுடைய மருத்துவ... எங்களுடைய மருத்துவ ஆம்புலன்ஸ், அதாவது மருத்துவச் சேவை இப்போது தொடர்ந்து நடைபெற்றது. இப்ப தேர்தலுக்காக நடத்தல. அதுல ஒரு டாக்டர், ரெண்டு நர்ஸ் கிராமம் தோறும் வருஷத்துல 365 நாளும் அவங்க போய் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான வைத்திய உதவிகளைச் செய்து தருவார்கள். தேவைப்படுகிற வைத்திய உதவிகளை இலவசமாக எங்களுடைய மருத்துவமனையில் யார் வந்தாலும் திருமயம் தொகுதி மக்களுக்குச் செய்து கொடுப்போம்.

நாங்க 200 சீட்ல ஜெயிக்கப் போறோம். எங்களுடைய கூட்டணிக்குக் கொடுத்திருக்கிற சீட்டு உங்களுக்குத் தெரியும். நாங்க 175 இடத்துல உதயசூரியன் சின்னத்துல போட்டியிடுறோம்.

தொகுதிக்குக் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்திருக்கேன், அதுதான் முக்கியம். ஏழை எளிய மாணவர்கள் படித்து அவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு வசதியானது கலை அறிவியல் கல்லூரி, அதை திருமயத்துக்கு முதல்ல கொண்டு வந்திருக்கோம். அதுதான் முக்கியம். அதைக் கொண்டு வந்திருக்கிறதைப் பாராட்டுங்க. ஏன்னா மற்ற விராலிமலைத் தொகுதில 10 வருஷம் அமைச்சராக இருந்தவர் அங்கே ஒரு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரவில்லை. நாங்கள் உடனடியாக கலை அறிவியல் கல்லூரியைக் கொண்டு வந்திருக்கோம். தொடர்ந்து மற்ற கல்லூரிகளைக் கொண்டு வர முயற்சிப்போம்.

வதந்திகளுக்கோ, கற்பனைகளுக்கோ பதில் சொல்ல முடியாது. திருமாவளவன் வந்து எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய நேர்மையான நண்பர். அவர் நிச்சயமாக மனசுல என்ன இருக்கோ அதைச் சொல்லக்கூடியவரே தவிர  வதந்திகளுக்கெல்லாம் அவர் இடம் கொடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்