கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் கிடைக்கும் வகையில் புதிய விற்பனை அங்காடி யான ‘கோங்கு டூரிஸ்டர்’ எனும் நிறுவனம் துவக்கப்பட்டது. இங்கு தரமான பேக் வகைகள், சூட்கேஸ்கள் விற்பனைக்கு கொண்டு வர பட்டுள்ளது!!
தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில் பிராண்டான ‘கோங்கு டூரிஸ்டர்’ எனும் நிறுவனம், கோவை சாய்பாபா காலனியில், தனது பிரத்யேக அங்காடியை துவக்கியுள்ளது. இதனை, இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் பி.லுந்த் ரிப்பான் வெட்டி தொடங்கிவைத்தார். மேலும் இதுகுறித்து கோங்கு டூரிஸ்டர் நிறுவனத்தின் இயக்குனர்கள் நடராஜன், கோவிந்தகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், மகாதேவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கோவையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், சுற்றுலா பயணிகள், பிசினெஸ் டிராவலர்கள் மற்றும் விடுமுறை பயணிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நீடித்த தரமான ட்ராலிகள் மற்றும் சூட்கேஸ்கள், பேக்க்பேக், லேப்டாப் பேக், டஃபிள் பேக், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பயணத்திற்கு ஏற்ற டெக் சாதனங்கள், பயணத்திற்கும் உடற்பயிற்சிக்கும் ஏற்ற உடைகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா திட்டங்கள், மேலும் நெக் பிலோ, டிராவல் அடாப்டர்கள், ஆர்கனைசர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் கிடைக்கின்றதாக தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், ஜிப், வீல் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றதாகவும், எங்கள் அனைத்து தயாரிப்புகளுக்கும் ஒரு ஆண்டு உற்பத்தி உத்தரவாதம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். 2,000 முதல் ரூ.23,000 வரை பல்வேறு விலை வரம்புகளில் எங்களின் தயாரிப்புகள் கிடைக்கின்றதாகவும், தரமும், நீடித்த பயனும், விலைக்கேற்ற மதிப்பும் இங்கு விற்பனை செய்ய படும் பொருட்கள் மீது உத்திரவாதம் அளிக்கப் படுகின்றதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்



கருத்துகள்
கருத்துரையிடுக