தமிழக மக்கள் பாஜகவை புறக்கணிப்பார்கள், உதயநிதி ஸ்டாலின்!!
ஆலங்குடியில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரிததுப்பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார் திமுக இளைஞரணிச்செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து நேற்று மாலை அவர் மேலும் பேசியதாவது:ஆலங்குடி தொகுதியில் 3-வது முறையாக களம்காணும் சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். ரூ.13 கோடியில் ஆலங்குடி அரசுக்கல்லூரி, திருவரங்குளம் பகுதியில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம், அழியாநிலையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு.மேலும், தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசுப் பள்ளிக்கட்டடங்கள். புதிய தார்சாலை வசதிகள், கால்நடை மருந்தகங்கள்,பூங்காக்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செய்து ஆலங்குடி தொகுதியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளார். அதனால், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற சிவ.வீ.மெய்யநாதனுக்கு அதிகளவிலான வாக்குகள் அளித்து அவரை 3-வது முறையாக தொகுதி மக்கள் ஹாட்ரிக் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
ஆலங்குடி தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கப்போவது, சட்டப்பேரவை உறுப்பினரை அல்ல அமைச்சரை. தமிழகத்திற்கு நிதி, திட்டங்களை தராமல் புறக்கணிக்கும் பாஜகவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். அதனால், எடப்பாடி பழனிசாமி மூலமாக தமிழகத்தை தில்லியில் இருந்து பாஜக கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அந்த முயற்சியை முதல்வர் ஸ்டாலின் முறியடிப்பார். அதற்கு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு 2019 ஆம் ஆண்டிலே நிறுத்திவிட்டு, திமுக அரசு அரசு திட்டத்தை முடக்கி விட்டதாக அவதூறு பரப்பிவருகிறது. ஆனால், தற்போது, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 35 லட்சம் மாணவ, மாணவியருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது திருமுயம் கோட்டை இருப்பது போன்று திமுகவிற்கு திருமயம் கோட்டையாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான் இது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் திமுக அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது மகளிர் உரிமைத் தொகை திட்ட எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அதிமுக பாரதியார் ஜனதாவினர் போராடி வருகின்றனர் இதை தெரிந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னரே கோடைகால சிறப்பு நிதியாக ரூபாய் 2000 சேர்த்து ரூபாய் 5000 ஆக வழங்கினார் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்கள் அடுத்து ஆட்சிக்கு வரும்போது நிறைவேற்றும் வாக்குறுதிகளையும் சொல்லிவிட்டேன் இந்த தேர்தல் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருக்க வேண்டும் அதுதான் நமக்கு நல்லது தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் மோடியும் அனுஷாவும் வாராவாரம் தமிழகத்துக்கு வருகிறார்கள். ஆனால் எந்த திட்டமும் தமிழகத்திற்கு வரவில்லை இந்த தொகுதி வேட்பாளர் எஸ் ரகுபதி ஏற்கனவே வெற்றி பெற்று ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வந்துள்ள மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் நாங்கள் ஒவ்வொரு தொகுதிகளும் தைரியமாக சென்று வாக்கு கேட்டு வருகிறோம் ஏனென்றால் சொல்லிய திட்டங்களையும் செய்துள்ளோம் சொல்லாத திட்டங்களையும் முதலமைச்சர் அறிவித்து நிறைவேற்றி உள்ளார்கள் இன்னும் ஏராளமான திட்டங்களை செய்ய உள்ளார் நாம் வெற்றி பெறுவது உறுதி திமுக அரசு செய்த சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் மீண்டும் நமது ஆட்சி அமைத்தவுடன் மகளிர்க்கு ரூபாய் 2000 உயர்த்தி வழங்கப்படும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் 10 லட்சம் பொதுமக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் மகளிர்க்கு ரூபாய் 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் இவ்வாறு பேசினார் மேலும் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் செக்போஸ்ட் அருகில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் செல்ல பாண்டியன் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக