திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர். ரகுபதியை ஆதரித்து, திருமயத்தில் துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதியை ஆதரித்து, திருமயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் திருமயம் தொகுதியில் போட்டியிட்ட ரகுபதி கடந்த முறை 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன். திருமயத்தில் கோட்டை இருப்பது போன்று, திமுகவிற்கு திருமயம் கோட்டையாக இருக்க வேண்டும் மாணவர்கள் லேப்டாப் திட்டம் அதிமுக கொண்டு வந்தது தான், ஆனால் அது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
மகளிர் உரிமை திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அதிமுகவும் பாஜகவும் போராடி வருகிறது. இதை தெரிந்து கொண்ட முதல்வர் தேர்தலுக்கு முன்னரே வழங்கி விட்டார். கோடைகால சிறப்பு நிதியாக 2,000 சேர்த்து ரூபாய் 5,000 வழங்கியது. ஐந்து ஆண்டுகள் வழங்கிய வாக்குறுதிகள், அடுத்து ஆட்சிக்கு வரும்போது செய்யும் வாக்குறுதிகள் சொல்லிவிட்டேன்.
இந்த தேர்தல் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான தேர்தல்.எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருக்க வேண்டும். அதுதான் நமக்கு நல்லது.தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.
மோடியும் அமித்ஷாவும் வாரம் வாரம் தமிழகத்திற்கு வருகிறார்கள் ஆனால் எந்த திட்டமும் தமிழகத்துக்கு வருவதில்லை. இந்த தொகுதி வேட்பாளர் ரகுபதி ஏற்கனவே வெற்றி பெற்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.அதை உங்களிடம் எடுத்துக் கூறியுள்ளேன் மேலும் இந்த பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால் திமுக வேட்பாளர் வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தைரியமாக சென்று வாக்கு கேட்டு வருகிறோம் ஏனென்றால் சொல்லிய திட்டங்களையும் செய்துள்ளோம் சொல்லாத திட்டங்களையும் நமது முதல்வர் செய்துள்ளார். இன்னும் பல ஏராளமான திட்டங்களை செய்ய உள்ளார் .நம் வெற்றி பெறுவது உறுதி ஆனால் அனைவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் தமிழக முதல்வர் செய்த திட்டத்தை எடுத்துக் கூறியும் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் எடுத்துக் கூறியும் வாக்குகள் சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் நமது ஆட்சி அமைந்த உடன் மகளிருக்கு 2000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் காலை உணவு திட்டம் விரிவாக்க செய்யப்படும். 10 லட்சம் பொது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் மகளுக்கு 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் ஏராளமான திட்டங்கள் நமது முதல்வர் அறிவித்துள்ளார். அனைத்தும் மீண்டும் கிடைத்திட நமது வேட்பாளரை வெற்றி பெற செய்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் திமுக மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் வழிபட ஏராளமான கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக