கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக நடனமாடி, வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்.தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 4) ரிஷிவந்தியம் தொகுதியிலுள்ள கிராமங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு கிராமத்தில் தாரை தப்பட்டை இசைக்கப்படுவதைக் கண்ட அவர், அந்த இசைக் கலைஞர்களுடன் இணைந்து தானும் உற்சாகமாக மேளம் வாசித்துக் கொண்டே நடனமாடினார். மக்கள் பிரதிநிதியான அவர், சற்றும் தயக்கமின்றி பொதுமக்களோடு ஒருவராகக் கலந்து கொண்டாடியது.
அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. வேட்பாளரின் இந்த அதிரடி 'பெர்பாமன்ஸ்' சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன்,அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு திருவிழாவைப் போல மாற்றியுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் வசந்தம் கார்த்திகேயன், கடந்த தேர்தல்களிலும் இதே போன்ற எளிமையான அணுகுமுறையால் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக