திமுக ஆட்சி அமைந்த உடன் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் ரகுபதி வாக்குறுதி!!


திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி நல்லாம்பட்டி, குருவிக் கொண்டான் பட்டி ,, குழிபிறை மலையலிங்கபுரம், சிவபுரம்  உள்ளிட்ட 40 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் தினத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். வேட்பாளர் மற்றும் அமைச்சர் ரகுபதி பேசுகையில் தமிழகத்தில் தற்பொழுது தேர்கள் நடைபெற உள்ளது, தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றவுடன் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படும். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு ரூபாய் 8000 மதிப்பில் கூப்பன் வழங்கப்படும்என்று கூறியுள்ளார் . கடந்த ஐந்து ஆண்டுகளில் மகளிர் களுக்கு இலவச பஸ் பயணம்|கர்ப்பிணிகளுக்கு இலவச உதவித்தொகை ,அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது .மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 8ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்ய உள்ளோம். மாணவ மாணவிகளின் மேல் படிப்பிற்காக புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தகுதியுள்ள 1.31 கோடி பெண்களுக்கு ஒரே தவணையாக ரூபாய் ஐந்தாயிரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம் மக்களின் நலன் கருதியே நடைபெறும்  திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது .மக்களின் நலன் கருதிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற தயாராக உள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு வேட்பாளர் ரகுபதி பேசினார். அமைச்சர் ரகுபதி உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம், ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், இளையராஜா ,அழகு சிதம்பரம் ,கணேசன் மேலூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம் திமுகவைச் சேர்ந்த அனைத்து தொண்டர்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்