மதுரை : வெகு விமர்சையாக நடைப்பெற்ற உலகை ஆளும் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்!!
மதுரை: உலகப் புகழ்பெற்றமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்குப் பல்வேறு சிறப்புச் சடங்குகள் செய்யப்பட்டு, நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட வைரக் கிரீடத்திற்குப் புனித நீரால் 'அபிஷேகம்' நடத்தப்பட்டது; அதனைத் தொடர்ந்து மகா 'தீபாராதனை' காட்டப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு மதுரையின் செங்கோல் வழங்கப்பட்டது. மதுரையின் அரசியாக அம்மன் முடிசூட்டிக் கொண்ட இந்த மங்கல நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக