ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற டாக்டர். பி ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் 'சமத்துவ நாள்' உறுதி மொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (13.4.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு நுழைவுவாயிலில்
ஏப்ரல் 14, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி 'சமத்துவ நாள்' உறுதிமொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
'சமத்துவ நாள்' உறுதிமொழி!
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற 'சமத்துவ நாள்' உறுதிமொழியை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். அறிவுடைநம்பி, அலுவலக பொது மேலாளர்.ஜெய்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக