குடியாத்தத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட நிர்வாகியை ஓட ஓட கத்தியால் வெட்டிய அண்ணன் - தம்பி -அண்ணன் கைது தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!

 வேலூர் மாவட்டம்,குடியாத்தத்தில் முன்விரோதம் காரணமாக விசுவ இந்து பரிஷத் வேலூர் மாவட்ட நிர்வாகிக்கு சரமாரியாக வெட்டு.

குடியாத்தம் பிச்சனூர்பேட்டை , ஆனை கட்டி கணபதி தெருவை சேர்ந்தவர் விநாயகம்  மகன் கார்த்தி (39). விசுவ இந்து பரிஷத் வேலூர் மாவட்ட நிர்வாகி.

குடியாத்தம் தியாகி குமரன் தெருவை சேர்ந்த   ஜீவித், சேஷாத். அண்ணன் தம்பி இவர்களுக்கும், கார்த்திக்கும் முன்பிரோத தகராறு இருந்ததாக கூறப்படுகிறது

இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கார்த்தியை முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பிகளான ஜீவித், சேஷாத் இருவரும் கத்தியால் வெட்ட முயன்றனர்.

இவர்களை கண்டதும் கார்த்தி தப்பி ஓடியுள்ளார். 

இருப்பினும்  விரட்டிச் சென்று சரமாரியாக கத்தியை. கத்தியால் வெட்டி உள்ளனர்  

இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .

இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ்சார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

இந்நிலையில் போலீசார் ஜீவித் 29 கைது செய்துள்ளனர் மேலும் தலை மறைவாக உள்ள ஷேசத்தை  வலை வீச்சு தேடி வருகின்றனர்

இதனால் குடியாத்தத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்