விலைவாசி தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது சசிகலா பேச்சு!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அ இபுதமுக வேட்பாளர் தபிதாளை ஆதரித்து, அ இபுதமுக பொதுச் செயலாளர் வி. கே.சசிகலா 19.4.2026 அன்று குடியாத்தம் வருகை தந்தார்.மாதனூரில் இருந்து குடியாத்தம் வருகை தந்த போது உள்ளி கூட்ரோட்டில் அழிஞ்சி குப்பம் வி. திருநாவுக்கரசு தலைமையிலான உள்ளி யுவராஜ், ஜெயகுமார் உட்பட சின்னம்மா சசிகலா விசுவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு  வரவேற்பு அளித்தனர்.அப்போது மக்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது :குடியாத்தம் மண்ணிற்கு உங்களை தேடி வருகை தந்திருக்கிறேன்.அரசியலுக்காக தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகள் அள்ளி வீசுவது தவறானதாகும் இரு வாரங்களாக மக்களிடம் பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து அவர்கள் கூறுவதை தொகுத்து நிறைவேற்ற முடிந்த 60 வாக்குறுதிகளை நான் அளித்துள்ளேன். நான் ஆட்சிக்கு வந்தால் நான் இதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.பதவிக்கு வந்தவுடன் மறந்துவிட்டு தான் தோன்றி நடப்பது தவறான போக்கு.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின்வாரியம் நல்ல லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கூடுதலாக மின்னோட்டத்தை மேற்கொண்டு பிற மாநிலங்களுக்கு விற்று தமிழக அரசு நூறு கோடி ரூபாய் நாள்தோறும் லாபம் ஈட்டி வந்தது. ஆனால் இன்றோ மின்வாரியம் பிற மாநிலங்களிடமும் இருந்த தனியார் இடம் இருந்தும் மின்சாரத்தை பணத்திற்காக வாங்கும் நிலை,  பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.பல நிறுவனங்கள் மூடி கிடைக்கின்றன. வேலைவாய்ப்பு பெருகவில்லை. விலைவாசி தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது. இதையெல்லாம் மாற்ற தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.நாங்கள் வெற்றி பெற்றால் குடியாத்தத்தில் அரசு மகளிர் கல்லூரியில் அமைப்போம். பத்திரப்பள்ளி அணையை விரைவாக கட்டி முடிப்போம். குடியாத்தத்தில் கைத்தறி பூங்காவை அமைப்போம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது குடியாத்தத்திற்கு பிரசாரம் வந்த ஜெயலலிதா அவர்கள் இங்குதான் தாலிக்கு தங்கம் வழங்கியது என்ற திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தது என் நினைவு கூறுகிறது.

 இவ்வாறு அவர் பேசினார்.உள்ளி  கூட்டு ரோட்டில் பேசி முடித்தவுடன் சசிகலா குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில்,  வேட்பாளர் தபிதாளை  ஆதரித்து  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.அங்கு கூடியிருந்த மூன்றாயிரம் மேற்பட்ட மக்கள் மத்தியில் சசிகலா நிகழ்ச்சியை எழுச்சி உரையை கேட்டு மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.' சின்னம்மா வாழ்க சின்னம்மா வாழ்க' என்று மக்கள் எழுப்பிய கரகோஷத்தை மத்தியில் சசிகலா  உரை நிகழ்த்தினார்.கூட்டத்தினரை மகிழ்விக்க நாடகக் கலைஞர்களின்  எம்.ஜி.ஆர். பட பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. சசிகலா வருகின்ற போது இந்த நாள் இந்த கலைஞர்கள் அவருக்கு வரவேற்பு அளித்த போது சசிகலா  மகிழ்ச்சியுடன் வரவேற்பை ஏற்றார். கூட்டத்தில்  சசிகலா கட்சி நிர்வாகிகள்  ஆர். வெங்கடேசன் வி . சீனிவாசன் ஜி . சௌந்தர்ராஜன், சேஷாத்திரி,ஹரி,இளங்கோ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.குடியாத்தத்தில் பேசி முடித்த வி. கே.சசிகலா கே. வி. குப்பம், காட்பாடி தொகுதிகளில் தனது வேட்பாளர்கள் ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்