திருமயம் தெற்கு ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர். எஸ். ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் !!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் திமுக வேட்பாளர் அமைச்சர். ரகுபதி திருமயம் தெற்கு ஒன்றியத்தில் புலிவலம் ஊராட்சி, கோட்டையூர் ஊராட்சி, இளஞ்சாவூர் ஊராட்சி, ஊனையூர் ஊராட்சி, துளையானூர் ஊராட்சி ஆதனூர் ஊராட்சி   உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் குறிப்பிட்டதாவது திமுக திராவிட மாடல் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே துணிச்சல் மிக்க முதலமைச்சர் என்ற பெயரை பெற்று இருக்கிறார். இத்தகைய சிறப்புடைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தொடர  நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .பெண்களுக்கு கட்டணம் இல்லாத விடியல் பஸ்வசதி, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2000 ஆக வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 8000 மதிப்பில் கூப்பன் வழங்கப்படும் என்றார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம், ஏ.எல் ராமு , குழிபிறை பாண்டி, கோட்டை குமார், லெம்பலக் குடி பழனிவேல், மேலூர் சண்முகம், அரிமளம் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம் , இளையராஜா, ,அழகப்பன் அம்பலம் ஒன்றியசெயலாளர் அடைக்கல மணி, பொன்னமராவதி நகர செயலாளர் அழகப்பன், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழர் தேசம், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட 1 நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்