புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் ,பொன்னமராவதி , அரிமளம், கே.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் எஸ் ரகுபதி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்!!
திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி, அரிமளம், கே.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புலிவலம், கோட்டையூர், இளஞ்சாவூர்,ஊனையூர், துளையானூர், ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் குறிப்பிட்டதாவது திமுக திராவிட மாடல் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே துணிச்சல் மிக்க முதலமைச்சர் என்ற பெயரை பெற்று இருக்கிறார். இத்தகைய சிறப்புடைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தொடர நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .பெண்களுக்கு கட்டணம் இல்லாத விடியல் பஸ்வசதி, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளோம். உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2000 ஆக வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 8000 மதிப்பில் கூப்பன் வழங்கப்படும் என்றார் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம், ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், இளையராஜா மற்றும் மேலூர் சண்முகம், அழகப்பன் அம்பலம் ஒன்றியசெயலாளர் அடைக்கல மணி, பொன்னமராவதி நகர செயலாளர் அழகப்பன், அழகு சுப்பையா, ஆலவயல்முரளி சுப்பையா, செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழர் தேசம், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக