அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் நடைபெற்ற நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பட்டமளிப்பு!!


ராஜேந்திரபுரம் நைனாமுகமது கலை மற்றும் அறிவிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தாளாளர் முகம்மது பாருக் தலைமை வகித்தார். 22 வது ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம்கணேஸ்ஷ் கலந்து கொண்டு, மாணவிகள் தங்கள்  எதிர்கால வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி  எவ்வாறு பயணிப்பது குறித்து சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து  மாணவிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வுநடைபெற்றது. இதில் கலை அறிவியல் கல்லூரி இளங்கலை பட்டதாரிகளாக  127 மாணவிகளும், முதுகலை பட்டதாரியாக 17 மாணவிகளும், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 143 பேர் பட்டங்களை பெற்றனர்.மேலும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த  மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியார்ப்பள்ளி நிர்வாகி முகமது அசாருதீன்  கல்லூரிகளின் முதல்வர்கள் திருச் செல்வம், அசோக்ராணி உள்ளிட்ட பெற்றோர்கள் , மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்