மதுரை: ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜை !!
மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜை நடை பெற்றது. இந்த ஆஞ்சநேயர் சிறப்பு என்னவென்றால், பொருட்கள் தொலைந்து போனால், இந்த ஆஞ்சநேயருக்கு வேண்டி இளநீரை கண் திறந்து அவர் பாதத்தில் வைத்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும்.
இன்று ஒரு நிகழ்வு நடந்தது. முருகேசன் மணிமேகலை தம்பதியர் பூர்வீக தங்க செயின் வீட்டில் வைத்த இடம் தெரியாமல் வீடு முழுவதும் தேடி கிடைக்க வில்லை. ஆஞ்சநேயரை நினைத்து பொருள் கிடைக்க வேண்டினர். கனவில் வைத்த இடம் காட்டியது. உடனே தேடிபார்த்தபோது அந்த இடத்தில் பொருள் இருந்தது. வேண்டிய படி இளநீர் கண் திறந்து வேண்டுதல் நிறைவேற்றினர். வண்டி சாவி காணாமல் போனது வேண்டியதும் கிடைத்தது.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.


கருத்துகள்
கருத்துரையிடுக