கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 2 வது வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் மாற்று வேட்பாளரும் வேட்புமனு தாக்கல்!!
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம கலாமணி ஜெகநாதன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் தனது 2 வது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதேபோல் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக ஆர் வி ஹேமலதா வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலமணி பிரச்சாரத்துக்கு செல்லும் பகுதிகளில் தற்போதையுள்ள சட்டமன்ற உறுப்பினர் யார் என்றே தெரியவில்லை என தெரிவிக்கின்றனர் எனவே நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் பத்தாயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பதாக மாற்றி மாறி ஒவ்வொரு கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன பொருள் வாங்க முடியும் எனவே அதை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கவுண்டம்பாளையம் தொகுதியில் நடைபெறும் கனிம வள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக