திண்டுக்கல்லில் 2 கள்ள ஓட்டு பதிவு!!

திண்டுக்கல், SBC-பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் M.V.M நகரை சேர்ந்த ராம்பிரபு என்பவர் மனைவி ரோகினி என்பவருடைய வாக்கினை மற்றொருவர் செலுத்தி சென்றதால்.

ரோகினி வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து 17b டெண்டர் வாக்கு பதிவு செய்தார்.

இதேபோல் திண்டுக்கல் YMR-பட்டி கென்னடி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் MSP. காலனி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கணேசன் என்பவர் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதால்

வாக்கு மைய தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து 17B டெண்டர் வாக்கை பதிவு செய்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்