தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஏப்ரல் 25, 26ல் குழந்தைகள் கணித திருவிழா!!
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் டி. சசிகலா இணைச் செயலாளர்கள் பி.சுகுமாரன், வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ப.ராஜேந்திரன், பி.ரவிந்திரன், பெ. ராமு, அணைக்கட்டு கிளை செயலாளர் இ.முரளி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்கள். குழந்தைகள் கணித திருவிழாவிற்கான செயல் அறிக்கையினை மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைவர் முத்து சிலுப்பன் அவர்களிடம் அளித்தார்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1.இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் குழந்தைகள் கணித திருவிழா கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி அடுத்த இயற்கை வேளாண் அரங்கம் அறிவுத்தோட்டம் வளாகத்தில் நடத்துவது என்றும் ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது. கணித திருவிழாவில் இரண்டு நாட்களும் சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும் கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்றுவது.
2. உலக புத்தக தின விழாவை கே.வி.குப்பம் ஒன்றியத்தில் இம் மாதம் கடைசி வாரத்தில் நடத்துவது
3. வேலூர் கிளையின் சார்பில் கோடை அறிவியல் முகாம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
4. மாவட்ட நிர்வாகத்துடன் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து அனைவரும் வாக்களிப்போம் வாக்களிப்பது நம் கடமை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது
5. மக்கள் சாசனம்-2026 என்ற தலைப்பில் தமிழக வளர்க்கான ஒரு தொலை நோக்கோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோரிக்ககளை 17-வது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேண்டபாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் வேண்டுகோள் வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
6. வேலூர் மாவட்டத்தில் உள்ள அறிவியல் இயக்க கிளைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்று செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக