இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்!!


ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.04.2026) எண்.039 சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, ரெண்டாடி ஊராட்சி குளத்தூர் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 குறித்து விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு, தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு தேர்தல் அழைப்பிதழை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

தொடர்ந்து, செக்கடிக்குப்பம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 குறித்து விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு தேர்தல் அழைப்பிதழை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து, பழைய பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பார்வையிட்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, வாக்காளர்களுக்கு தேர்தல் அழைப்பிதழை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பின்னர், குன்னத்தூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 குறித்து விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு, பாராஞ்சி ஊராட்சி, ஜோதி மோட்டூர் பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தேர்தல் அழைப்பிதழை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

முன்னதாக, காட்ரம்பாக்கம் மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ரெண்டாடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வாக்குச்சாவடி மையங்களில் CCTV கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை இன்று இரவுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான வழிகாட்டு பலகைகளை முறையாக அமைக்கவும் கேட்டுக்கொண்டார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பந்தல் அமைத்து வைக்க வேண்டும் எனவும் குடிதண்ணீர் வசதி முறையாக ஏற்படுத்த வேண்டும் எனவும் வட்டாட்சியர் அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செந்தில் குமரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.செல்வி, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், அருண், தினேஷ், கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்