ராணிப்பேட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு பேரணி (FLAG MARCH) நிகழ்ச்சி!!


ராணிப்பேட்டை மாவட்டம்,இன்று (10.03.2026) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பே.சிபின், இ.கா.ப.,அவர்கள் தலைமையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றியும் விழிப்புணர்வுடனும் வாக்களிக்க மாவட்ட காவல் துறையினர் மற்றும் இந்தோ- திபெத்திய எல்லைக்காவல் படையினரின் கொடி அணிவகுப்பு பேரணி (FLAG MARCH) நடைபெற்றது. இந்தப் பேரணியானது செய்யார் ரோடு ஜங்ஷன் இருந்து தொடங்கி கண்ணமங்கலம் ரோடு ஜங்ஷன்  வரையிலும் வந்து நிறைவடைந்தது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்