மகளிர் தினத்தை முன்னிட்டு த.வெ.கா. சார்பில் பொதுக்கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் த.வெ.கா. சார்பில் மூன்றாம் ஆண்டு மகளிர் தின விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தளபதி ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் வடிவேல் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் இன்பா ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பெண்களின் முன்னேற்றம், சமூகத்தில் அவர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் விஜய்தீப், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், கார்த்திக், விக்கிரவாண்டி நகர செயலாளர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். அணி அமைப்பாளர்கள், பிரித்திவிராஜ், மனோரஞ்சிதம்,மணி, வேட்டை மணி ,ஒன்றிய செயலாளர்கள், சேகர், பாரதி,மணிராஜ், ஜில்லா ராம், முத்து, ஜான் பீட்டர்,ஸ்ரீதர் ரமேஷ் ,ராஜ்குமார், சிவகுமார், மற்றும் இறுதியில் விக்கிரவாண்டி மகளிரணி இணை அமைப்பாளர் ஆனந்தி நன்றியுரை கூறினார் . இதில் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக