மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த பசும்பொன் உ.முத்து ராமலிங்கதேவர் இயற்கை எய்தினார்!!

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த பசும்பொன் உ.முத்து ராமலிங்கதேவர் சுமை தூக்குவோர் நலச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும், முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றிய கருத்தரிவான் சி. ராமகிருஷ்ணத்தேவர் (90) அவர்கள் இன்று (17.03.2026) அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

         சமூக நலனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த ராமகிருஷ்ணத்தேவர், சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் உரிமைகள் காக்க  பணியாற்றியவர்.

         சங்கத்தின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் நலனில்  அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.  

        அவரது நேர்மை, எளிமை மற்றும் சமூக அக்கறை காரணமாக அவர் பொதுமக்களிடையே பெரும் மரியாதையைப் பெற்றிருந்தார்.

மறைந்த ராமகிருஷ்ணத்தேவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை மதுரை கீரைத்துறை பகுதியில் நடைபெற்றது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்