தேனி; காமாட்சிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி பகுதிகளில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேப்பம்பட்டி வாழ் பொது மக்கள் கோரிக்கை...!


தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு காமாட்சிபுரம் துணை மின் நிலையத்திற்கு பாத்தியப்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக உயர் மின் அழுத்தத்தால் பல்வேறு வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன.வேப்பம்பட்டி ஊராட்சி பகுதிகளில் உயர் மின் அழுத்தம் காரணமாக பல்வேறு வீடுகளில் உள்ள LED டிவிகள், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, மிக்ஸி, க்ரைண்டர், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பலத்த சேதம் அடைந்து வருகின்றன.

குடியிருப்புகள் கணிசமாக பெருகி வரும் வேப்பம்பட்டி ஊராட்சியை பொருத்தவரை அப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து வரும் நிலையில், குறைவான மின்னழுத்தம் கொண்ட ட்ரான்ஸ்பார்மர்களில் காமாட்சிபுரம் துணை மின் நிலையத்திற்கு தெரிந்தே உயர் மின்னழுத்தம் என்பதை செயற்கையாக உருவாக்கி அதன் பலனாக பொதுமக்களுக்கு பாதகமாக பழுதான மின்சாதன பொருட்களை சரி செய்ய முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.மின் கட்டணத் தொகையை ஒரு நாள் தாமதமாக செலுத்தினாலும், அல்லது மின் கட்டணத் தொகையை செலுத்தாமல் இருந்தால் பீஸ் கேரியரை அதிரடியாக பிடுங்கி அபராதத் தொகை அதிலும் GST உடன் கூடுதல் அபராதத் தொகை விதித்து அதை மீட்டர் வட்டிக்காரர்கள் வசூல் செய்யும் தோரணையில் வசூலிக்கும் மின் வாரியத் துறையினர்,

மின்சாரத்துறையின் அலட்சியத்தினால் பழுதான மின்சாரப் பொருட்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். வேப்பம்பட்டி ஊரக பகுதிகளில் பெருகிவரும் குடியிருப்புகள் அதனைத் தொடர்ந்து தேவைப்படும் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் என தமிழக மின்வாரியத்திடம் கேட்டு பெற்று அதை தனியார் கார்ப்பரேட் பெரும் விவசாயிகளுக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தாரை வார்த்து கொடுக்கிறதா காமாட்சிபுரம் துணை மின் நிலையம் என இப்பகுதி மக்கள் மத்தியில் வலுவான சந்தேகம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்