திட்டக்குடி அருகே போலி பட்டா மூலம் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு! சோலார் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் தர்ணா!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஊராட்சியில், விவசாய நிலங்களை போலி பட்டா மூலம் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட தனியார் சோலார் நிறுவனத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலியான பட்டா மாற்றம் செய்ததாக கூறப்படும் கிராம ஆய்வாளர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“நாங்கள் தலைமுறைகளாக பயிரிட்டு வந்த நிலம் இப்போது ஆவண மோசடி மூலம் பறிக்கப்படுகிறது” என்று விவசாய குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்