நத்தத்தில் அதிமுகவில் இணைந்த த.வெ.க கட்சியினர்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏதிரே உள்ள அரசு சமுதாயக் கூடத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம்.விசுவநாதன் முன்னிலையில் த.வெ.க. கட்சியிலிருந்து 150 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ஆர்.வி.என்.கண்ணன், தொழிலதிபர் அமர்நாத், மாவட்ட பேரவை இணைச் செயலர் ஜெயபால்,தெற்கு ஒன்றியச் செயலர் மணிகண்டன், நகர அவைத் தலைவர் சேர்ஒலி உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக