புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr K H சலீம் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஹார்மோன் கிளினிக் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவ .சக்திவேல், கலந்து கொண்டு, பெண்களுக்கான கல்வி சுகாதாரம் சமூக பாதுகாப்புமுறை நல்லொழுக்கம் பெண்கள் முன்னேற்றம் தன்னம்பிக்கை மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து சிறப்புரை வழங்கினார்.
இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விளையாட்டு துறையில் பெருமை சேர்த்த விளையாட்டு வீராங்கனைகள் செல்வி.குருபிரியா , செல்வி. நிவேதா மற்றும் செல்வி .அக்சயா ஆகியவர்களை பாராட்டி ,பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் G வெங்கட்ராமன் , இருக்கை மருத்துவர் முகமது கனி, செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.பின்னர் மகளிர் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர் . மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் சூரியகலா விழா ஏற்பாடுகளை செய்தார். இறுதியில் மேலாளர் சத்தியசீலன் நன்றியுரை கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக