ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூபாய் 86 லட்சம் மதிப்புள்ள சுமார் 13 டன் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பூமியில் புதைத்து அழிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்களின் உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 34 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 84.35.182/ மதிப்புள்ள சுமார்13.243 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 02.03.2026 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டது.
மேற்கண்ட அழிப்பு நடவடிக்கையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு கலவை காவல் நிலையம் அவர்கள் தலைமையில் வாலாஜாபேட்டை குப்பை கொட்டும் கிடங்கிலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் அசோகன் அவர்கள் தலைமையில் தக்கோலம் டவுன் பஞ்சாயத்து குப்பை கொட்டும் கிடங்கிலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்ட விதிமுறைகளின் படி பூமியில் புதைத்து அழிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உற்பத்தி கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சிவகுமார்


கருத்துகள்
கருத்துரையிடுக