உலக மகளிர் தினம் நாளை(மார்ச் 8)கொண்டாடப்படும் விதமாக 200 அடி உயரத்தில் 200 பெண்களை கொண்டு நடைபெற்ற போதைக் கெதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

மதுரை ஸ்டார் குரு சாரிடபிள் பவுண்டேசன் சார்பாக நடைபெற்றது. அதன் நிறுவனர்.குருசாமி அவர்கள் போதையில்லாத சமூகத்தை உருவாக்கிட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக  உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாகவும் போதைக்கெதிரான விழிப்புணர்வு வழங்கி DRUG FREE SOCIETY உருவாக்கும் விதமாகவும் மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையில் 200 அடி உயரத்தில் 200 பெண்களை கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது.

ஸ்டார் குரு பவுண்டேசன் நிறுவனர். ஸ்டார் குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள், உடல் மற்றும் மனம் சார்ந்து வரும் பிரச்சனைகள், பொருளாதார பிரச்சணைகள், அதன் தொடர்ச்சியாக வரும் தற்கொலை எண்ணங்கள், பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு வழங்கினார் மேலும்  போதை பொருள் பயண்படுத்துபவரை மீட்டெடுக்க ஸ்டார் குரு பவுண்டேசன் உறுதுணையாக செயலாற்றும்  என்று உரையாற்றினார்.   மதுரைமாவட்ட காவல்துறை சார்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை  துணை காவல் கண்காணிப்பாளர்.பாஸ்கரன் அவர்கள்  கலந்து கொண்டு மதுரை மாவட்டத்தில் போதைப்பொருள் பயண்பாட்டினை தடுக்கின்ற வகையில் காவல்துறையால் 

எடுக்க படுகின்ற நடவடிக்கைகள் குறித்தும்  மொபைல் ஆப் குறித்தும் தங்கள் பகுதிகளில் யாரேனும் போதை பொருட்கள் பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் எவ்வித தயக்கமின்றி புகாரளிக்க முன் வரவேண்டும் தகவல் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் எடுத்துரைத்து போதைக் கெதிரான விழிப்புணர்வு வினாடி-வினா நிகழ்வில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தன்னார் வலர்கள் அடங்கிய 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்