நத்தம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.71600 பணம் பறிமுதல்!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நத்தம் அருகேயுள்ள சிலுவத்தூர்- கம்பளியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அழகேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனைம் மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.அந்த காரில் ரூ.71600 பணம் இருந்தது. இது தொடர்பாக சரக்கு வாகனைம் வந்த வடமதுரை- பாறைப்பட்டியை சேர்ந்த வியாபாரிடம் பாபு என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நத்தம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கைபற்றபட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்