குளமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோவில் மாசி மகத் திருவிழா 33 அடி குதிரை சிலைக்கு 2ஆயிரம் காகித மாலை பக்தர்கள் நேர்த்திக்கடன்செலுதிதரிசனம்!!


புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலத்தில் வில்லுணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலைக்கு (33 அடி உயரம்) புகழ்பெற்றது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இக்கோவிலில் மாசிமகத் திருவிழா 02.03.2026,03.03.2026 திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் செலுத்த காகிதத்தால் ஆன மாலை கார், வேன், சுமோ, ஆகிய வாகனங்களில் முலைகள் நீண்ட வரிசையில் நின்று குதிரை சிலைக்க மாலை அணிவித்தனர். இக்கோவிலின் சிறப்பு  திங்கள், வெள்ளிக்கிழமை வழிபாடுகள் மிகவும் சிறப்பானவை. 

சிறப்பம்சங்கள் பெரிய குதிரை சிலை: கோவிலின் நுழைவாயிலில் 33 அடி உயரமுள்ள பிரம்மாண்ட குதிரை சிலை, இது ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையாகக் கருதப்படுகிறது. தலவரலாறு ஆற்றங்கரையில் கிடைத்த அய்யனார் சிலை, மீண்டும் அதே ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பெருங்காரையடி மிண்ட அய்யனார்' என அழைக்கப்படுகிறார். திருவிழா மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் குதிரை சிலைக்கு ராட்சத மாலை அணிவித்து வழிபாடு செய்யப்படுகிறது. அமைவிடம் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குளமங்கலம் கிராமத்தில் வில்லுணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இக்கோவில் அப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், கலைநயமிக்க சிற்பங்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகிறது. இக்கோவிலுக்கு கொத்தமங்கலம் கிராமத்திலிருந்து தானமநாடு வகையராவின் சார்பில் மேள தாழங்கள் வாகனத்தில் குதிரை சிலைக்கு 33அடி உயரமுள்ள காகித மாலை கொண்டுசென்று மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.  விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்