கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது!!
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக் கல்லூரியின் தலைவர் டாக்டர் இராமசாமி தலைமையேற்று “இளைய தலைமுறையினர் கல்வியோடு கலையார்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்து சமூகத்தின் உயர்வுக்குத் துணைநிற்க வேண்டும்” எனக் கூறினார்.
அவரைத்தொடர்ந்து கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சிகாமணி “ஆற்றலுடன் முயற்சி செய்தால் வெற்றியை அடையலாம்” எனக்கூறி சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் “மாணவர்களின் வளர்ச்சி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் போதே தொடங்குகிறது” எனக்கூறி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கீதா “இலக்கினை அடைய துணிந்து செயலாற்றும் மாணவர்கள் வெற்றியை அடைவது உறுதி” எனக்கூறி மகிழ்வுரையாற்றினார். யுகந்தா’26 நிகழ்வில் கல்லூரி மாணவர்களுக்கான முகவோவியம், நக அலங்காரம், மெஹந்தி, குழு நடனம், ரீல்ஸ் உருவாக்கம், ஆடை அணிவகுப்பு, கனெக்ஷன், புகைப்படப்போட்டி, வண்ணந்தீட்டுதல், மிஸ்டர் அண்ட் மிஸ் யுகந்தா முதலிய கலைப்போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் தம் தனித்துவமான பங்களிப்பைத் தந்து வணிகவியல் துறையானது யுகந்தா’26 சுழற்கோப்பையை வென்றது. இந்நிகழ்வையொட்டிக் கல்லூரி வளாகத்தில் உணவு, உடை, சிற்றுண்டி, ஓவியங்கள், அழகுசாதனப்பொருட்கள், பயன்பாட்டுப்பொருள்கள் எனப் பல்வேறு வகையான கடைகள் அமைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வடம் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
யுகந்தா’26 விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்படக்கலைஞர்கள் ஜி.வி.பிரகாஷ், விமல் முதலியோரும் திரையிசைப்பாடகர்கள் பிரியாஜெர்ஷன், பிரசன்னா மற்றும் டிஜே மதன் ஆகியோர் கலந்துகொண்டனர். யுகந்தா’26 கலை விழாவில் கலந்துகொண்டோரை மாணவர் நலக்குழுவின் புலமுதன்மையர் முனைவர் பி.ஷர்மிளா வரவேற்றார். இக்கலைவிழாவில் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்





கருத்துகள்
கருத்துரையிடுக