ராணிப்பேட்டையில் ரூ1.46 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்!மாவட்டஆட்சித்தலைவர்.ஜெ.யு.சந்திரகலா IAS !!
ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப் பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் காட்பாடி சட்டமன்ற தொகுதி, வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ1.46 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
796 பயனாளிகளுக்கு ரூ.6.98 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.மு. கதிர் ஆனந்த் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.3.2026) இராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி, வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கொண்டகுப்பம் ஊராட்சி, கும்மணந்தாங்கல் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 13 குடியிருப்புகள், நீர்தேக்கத் தொட்டி, சிமெண்ட் சாலை உள்ளிட்ட ரூ.1.58 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், இலாலாப்பேட்டை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதி ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட கிளை நூலகம் கட்டுமானப் பணிக்கும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் நியாய விலைக்கடை, சிமெண்ட சாலை, தார்சாலை அமைத்தல் பணிகளுக்கும் என மொத்தமாக ரூ1.46 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
தொடர்ந்து, முகுந்தராயபுரம் ஊராட்சி, அக்ராவரம் கிராமத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதி, வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளைச் சார்ந்த 796 பயனாளிகளுக்கு ரூ.6.98 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்துத்தர மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு அரசை தேடிச் சென்ற நிலை மாறி, அரசு பொதுமக்களை நாடிவந்து குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை கண்டு வருகிறது. அதனடிப்படையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகள், உட்பிரிவு பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரியும், பட்டா இருந்து வீடு வழங்க கோரியும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று வருகிறது.
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கொண்டகுப்பம் ஊராட்சி கும்மணந்தாங்கல் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 13 குடியிருப்புகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இப்பகுதியிலுள்ளவர்கள் தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும், பொதுப் பிரச்சனைகள் குறித்தும் மனுக்கள் வழங்கிடுங்கள். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3000 பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளுக்கு பணியாணைகள் வழங்கப்பட்டது. இதில் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதர வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் 1000 புதிய வீடுகள் வரப்பெற்றுள்ளது. இதற்கான பணியாணைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு நாளை முதல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு மருத்துவர்கள் வருகைத்தந்து நோயாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சைகளும் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைகளும் செய்யப்பட்டனர். இதுபோன்ற திட்டங்களின் மூலம் பொதுமக்கள் பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பேசியதாவது:-
இந்தியாவிலேயே வேற எந்த மாநிலத்திலும் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்கள் இல்லை. நமது காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு நீர்வளத் அமைச்சருமான என்னுடைய தந்தையார் துரைமுருகன் அவர்கள் மட்டுமே 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக காட்பாடி தொகுதியில் இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் தன்னுடைய சட்டமன்ற தொகுதியை தான் வணங்கும் கோவில் ஆகவும் சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களை தன்னுடைய கடவுளாகவும் நினைத்து சட்டமன்ற தொகுதிக்கு பணியாற்றி வருகிறார்கள்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.55 கோடிக்கு மேலான பொதுமக்களின் அடிப்படை வசதி கட்டமைப்புகள், குடிநீர், சாலை, மின்விளக்குகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள் என அனைத்தும் பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் இப்பகுதிகளின் அடிப்படை வசதி தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.10 கோடி மதிப்பீட்டில் அரசிடமிருந்து கேட்டு பெற்று வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும்தான் அனைத்து துறைகளின் அடிப்படை வசதிகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். சாலை வசதிகள் மருத்துவமனைகள் கல்லூரிகள் பள்ளிகள் போன்ற பல்வேறு துறைகளில் கட்டமைப்புகள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கேட்டு பெற்று விரைவாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் கொண்டகுப்பம் ஊராட்சி மற்றும் இலாலாபேட்டை ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த 9 ஊராட்சி கிராம பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் வசதிகள் மேம்பாட்டு பணிகளையும், சாலை வசதிகள் மேம்பாட்டு பணிகளையும் வேண்டி கோரிக்கைகள் வைத்துள்ளனர். இக்கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கொடுத்த வாக்குறுதிகளையும் தாண்டி புதிய புதிய திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு செயல்படுத்தி உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாரும் எதிர்பாராத வகையில் இந்த மாதம் ரூபாய் ஐந்தாயிரம் முன்கூட்டியே வழங்கி ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கினார்கள். அதேபோலத்தான் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், மாணாக்கர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மடிக்கணினிகள் வழங்கும் திட்டம். மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகள், சுயதொழில் செய்பவர்களுக்கு வங்கிக் கடன் உதவிகள், மானியத்துடன் வேளாண்மை திட்டங்கள், சுகாதாரத் துறைக்கான நலத் திட்டங்கள் என அனைத்து துறைகளிலும் முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தி அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் விரைவாக செயல்படுத்தி நல்லாட்சி புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு அனைவரும் நன்றி உள்ளவர்களாக செயல்பட வேண்டும் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கேட்டுக்கொண்டார்
நலத்திட்ட விவரம் பின்வருமாறு;-
வருவாய்த் துறையின் சார்பில் 230 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 12 பயனாளிகளுக்கு நலிவுற்றோர் குடும்பநல உதவித் திட்டம், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை திட்டத்ம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 85 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1.09 இலட்சம் மதிப்பீட்டிலான வேளாண் உபகரணங்கள், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.99,200/- மதிப்பீட்டிலான பண்ணைக் கருவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டிலான பவர்டில்லர் மற்றும் பவர் வீடர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.17,724/- மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 13,380/- மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.91.97 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி. மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2.78 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி, கூட்டுறவுத் துறை சார்பில் 119 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.04 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் மூலம் 172 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.63 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் 2 பயனாளிகளுக்கு ரூ.16.97 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கனுதவி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.56 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை வளர்ப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.09 இலட்சம் மதிப்பீட்டிலான கல்வி, திருமணம் உதவித் தொகைகள் என மொத்தமாக 796 பயனாளிகளுக்கு ரூ.6.98 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, ஒன்றியக் குழு தலைவர் திரு.வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், காட்பாடி ஒன்றிய குழு துணைத் தலைவர் வேல்முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் துளசி, வருவாய் கோட்டாட்சியர் ராஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் பிரபாகரன், வட்டாட்சியர் நடராஜன், கொண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக