நிதி பகிர்வில் மாற்றம் இல்லை!!
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை; 41% அளவிலேயே தொடரும்.
சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்; புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.
மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE-மார்ட் சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும். She என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு
வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2%ஆக குறைப்பு.
மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக