புதுச்சேரியில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த குடும்ப பெண்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டிற்காக இலவச தையல் பயிற்சி!!
புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த குடும்ப பெண்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டிற்காக இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு தேவையான தையல் பொருட்களுடன் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் தையல் பயிற்சியை முடித்த 41 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு, மாண்புமிகு முதல்வர் . N. ரங்கசாமி அவர்கள், முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.மேலும், இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டமன்றத் தலைவர். ஏம்பலம் R.செல்வம் அவர்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
புதுவை செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக