வடகாட்டில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தினை கார்த்திக் சிதம்பம் திறந்து வைப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வடகாடு ஊராட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 6. 77 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தினை கார்த்திக் சிதம்பம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். மணிகண்டன், திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் ராம. சுப்புராம், வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் கீரமங்கலம் நகரத் தலைவர் சரவணன் நகரத் தலைவர் ஆலங்குடி அரங்குளவன் தெற்கு மாவட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் கிராம கமிட்டி தலைவர் செல்லத்துறை, பனங்குளம் தெற்கு வட்டாரத் தலைவர் ராகுல்ராஜ், திருவரங்குலம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக