அரக்கோணத்தில் அண்ணா நினைவு தினம்! அதிமுக எம் ஜி ஆர் இளைஞரணி சார்பில் ஏழைக்கு அன்னதானம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம்   பிப் 3ந் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அதிமுக மாவட்ட செயலாளர். சு.ரவி எம்.எல்.ஏ மற்றும் நகர செயலாளர். பாண்டுரங்கன் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் அரக்கோணம் நகரிலும் நகர எம்ஜிஆர் இளைஞரணி  நகரத் துணைத் தலைவரும் 2வது வட்ட பிரதிநிதியுமான

 வி.எஸ்.ராம்குமார் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகரில் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கபட்டது. அப்போது பாஸ்கர் பிரேமா, இலக்கிய அணி தலைவர் சேகர், வர்த்தக அணி தலைவர் சீனிவாசன் மற்றும் செந்தில் மகளிர் அணி தலைவர் பானுமதி பூர்ணிமாதேவி, தேஜா ஸ்ரீ, லிதன்யா ஸ்ரீ ஆகியோரும் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்