திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!!

திருச்சி மாவட்டம்,3 நாட்களுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 5 மணி நேரத்தில் காவல்துறையினர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். 

செவிலியர் சீருடை அணிந்து தடுப்பூசி போடுவதாகக் கூறி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.

 குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்துச் சென்றதாக கைதான மீனாட்சி என்பவர் போலீஸிடம் வாக்குமூலம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்