திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிர்ணயித்த ஊதியம் வழங்கக்கோரி 5வது நாளாக பணி புறக்கணிப்பு மற்றும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாசல் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து திருவாடானையில் அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வழியாக வந்த அதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர். M.A.முனியசாமி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். உங்களுடைய கோரிக்கையை மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான. எடப்பாடியார் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என கூறினார்.
இதில் அதிமுக கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர். K.C.ஆனிமுத்து, கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர். K.R.பாரதிகண்ணன், கழக வர்த்தக அணி துணைச் செயலாளர். சுப.ரெத்தினமூர்த்தி, திருவாடானை தெற்கு ஒன்றிய கழக செயலாளர். R.ரவிச்சந்திரன், திருவாடானை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். ஆசை.இராமநாதன், திருவாடானை மேற்கு ஒன்றிய கழக செயலாளர். A.ஆண்டவர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். செ. நாகராஜன் ராஜா, திருவாடானை வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளருமான. R.ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக