ஆற்காட்டில் அண்ணாவின் 57வது நினைவு தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர். அண்ணாவின் 57வது நினைவு தினத்தை யொட்டி , ஆற்காடு நகரில் உள்ள அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நகரமன்ற நகர செயலாளர். ஏ.வி. சரவணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு, அண்ணாவின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் நகர கழக உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்