நெமிலியில் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 57 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு! எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும்., மாண்புமிகு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57-ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் நெமிலி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நெமிலி அரக்கோணம் சாலையில் இருந்து நெமிலி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தி; முன்னதாக நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு நெமிலி மதிய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நெமிலி மதிய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தலைமையில் திமுகவினர். பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் நடப்போம்! அவர் தலைநிமிர்த்திய “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதியேற்போம்! என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா.செ நரசிம்மன், நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ந. பிரகாஷ், நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள் அ. சீனிவாசன், வழக்கறிஞர் தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், நெமிலி தெற்கு ஒன்றிய பொருளாளர் பி. செல்வம், மாவட்ட பிரதிநிதி. சி.ஜி.சன்முகம், நெமிலி வடக்கு ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர். தீனதயாளன், நெமிலி மத்திய ஒன்றியம். எல்லப்பன், நெமிலி தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். ஜெ. ராஜ ராஜன்,
நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். மணிகண்டன் கருணாநிதி, நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜி.வி.சதீஷ், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், BLA2,BDA,BLC மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர். ரவி





கருத்துகள்
கருத்துரையிடுக