தூத்துக்குடி–திருச்செந்தூர்–4 வழிச்சாலை (NH-32) திட்டத்தின் வழித்தடம் வெளியீடு!!

தூத்துக்குடி–திருச்செந்தூர்–கன்னியாகுமரி புதிய 4 வழிச்சாலை (NH-32) திட்டத்தின் வழித்தடம் வெளியிடப்பட்டுள்ளது.

106.9 கி.மீ. நீளத்தில் அமையும் இத்திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் 36 கிராமங்கள் வழியாக செல்கிறது. 

இதற்காக 853 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து 21 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம் நிறைவேறினால் தெற்குப் பகுதிகளில் பயண நேரம் மற்றும் தூரம் கணிசமாக குறையும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்