செங்காளிபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா! 1200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் PRG அருண்குமார் MLA வழங்கினார் !!
கோவை மாவட்டம்,கோவை செங்காளிபாளையத்தில் அனைத்திந்திய அண்ணா திடாவிட முன்னேற்ற கழகம் கோவை வடக்கு மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அ இ அ தி மு க நிறுவனர் எம் ஜி ஆர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா மற்றும் 1200 குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம் ஜி ஆரின் 109 வது பிறந்த நாள், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாளை அ தி மு க வினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை செங்காளிபாளையத்தில் அனைத்திந்திய அண்ணா திடாவிட முன்னேற்ற கழகம் கோவை வடக்கு மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக முப்பெரும் விழா மற்றும் 1200 குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அசோகபுரம் ஊராட்சி துணைத் தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே வி என் ஜெயராமன், முன்னாள் அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கலந்து கொண்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செய்தார். அவருக்கு அ தி மு க வினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பேசும்போது முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சியில் தான் தமிழகத்தில் குடிகள் தோறும் மின் விளக்கு திட்டம், பொங்கலுக்கு வேஷ்டி, சேலை திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், மகளிர் இருசக்கர வாகனம், தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் தி மு க ஆட்சிக்கு வரமாட்டோம் என்று தெரிந்து இன்று பெண்களுக்கு 5 ஆயிரம் பணத்தை போட்டுள்ளனர். இப்போது மீண்டும் தேர்தல் வரவுள்ள நிலையில் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று புது யுத்தியுடன் வந்துள்ளனர். இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் எப்படி கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஆந்யிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். அதைதொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மண்டல தலைவர் சரவணகுமார், அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், இளைஞரணி துணை செயலாளர் விநாயகமூர்த்தி, எஸ் எஸ் குளம் மேற்கு ஒன்றிய தலைவர் வேலுச்சாமி, முன்னாள் வார்டு உறுப்பினர் பாலாஜி நகர் பார்த்திபன், பொருளாளர் மருதாசலம், சங்கர் நகர் சிவசாமி, நாகராஜ், பாஜக செல்வராஜ், கிளைக் கழக செயலாளர்கள் ஜெயபால், ஆனந்தன், பொரி செல்வராஜ், ஆட்டோ ஆறுமுகம், சசிகுமார், தேவராஜ், எம் ஆர் நாகராஜ், டாக்ஸி நாகராஜ், மோகன்ராஜ்,
அண்ணாச்சி ராமமூர்த்தி, இளைஞரணி ரங்கநாதன், பிரபு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் தேவராஜ், எலக்ட்ரீசியன் தேவராஜ், ஜெயராஜ், பன்னாரி, பூசாரி பண்ணாரி, மாரிசாமி, அன்னலட்சுமி, ராணி, தேவராஜ், கோவிந்தன், வண்டிக்காரர் ராமசாமி, வாட்டர் மேன் தங்கவேல், நாகராஜ், பாலன், கனகராஜ், பூசாரி பொன்னுசாமி, டெய்லர் மாணிக்கம், அச்சுதன், கப்பல் பண்ணாரி, ரங்கசாமி, ரவிச்சந்திரன், ராஜேந்திரன், பாஜக மண்டல பொதுச் செயலாளர்கள் ஸ்ரீராம், வசந்தகுமார், மற்றும் நிர்வாகிகள் செல்வகுமார், சந்தோஷ், கிஷோர், சபரி, மகேஸ்வரன், கனகராஜ் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஐ டி விங் அசோகபுரம் அய்யன் பெருமாள் நன்றி கூறினார்.
முன்னதாக மக்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரைப்பட பாடல்களுக்கு அவர்களைப் போலவே வேடம் அணிந்து நடனம் ஆடினர். பொதுமக்களிடையே சென்று நடனமாடிய எம் ஜி ஆர் வேடமிட்டவருடன் பெண்கள் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் சிறுமிகளின் பரத நாட்டியம் மற்றும் சாகசத்துடன் கூடிய கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக