விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

விழுப்புரம் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் ரூ.1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, ”என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டம், வீரபாண்டியில் நடைபெற்ற அரசு விழாவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நலத்திட்ட பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்கள் என மொத்தம் 1,875 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்,சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்),ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ்.சரவணகுமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

விழுப்புரம் செய்தியாளர் விஜய்.

கருத்துகள்