வீழ்ந்தது ITC ! ஆண்டின் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்த ITC!!

 

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான ஒன்றிய அரசின் புதிய கலால் வரி விதிப்பால், நாட்டின் முன்னணி சிகரெட் உற்பத்தி நிறுவனமான ITC-யின் பங்குகள் நேற்று 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளது!

 வர்த்தகம் தொடங்கியபோது ரூ.403க்கு விற்பனையான ஒரு பங்கு, பங்குச் சந்தை முடிவில் ரூ.362.7-க்கு சரிந்தது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.50,000 கோடி வரை இழப்பு. மற்ற சிகரெட், புகையிலை பொருட்களை தயாரிப்பு நிறுவனங்கள் மீதும் இதன் பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் கணிப்பு.

தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்