கூடலூரில் பொங்கல் சிறப்பு கபடி போட்டிகள் – அமைச்சர் துவக்கம்!!
திராவிட சமத்துவம் பொங்கட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்! என்ற தலைப்பில்:கூடலூரில் பொங்கல் சிறப்பு கபடி போட்டிகள் – அமைச்சர் துவக்கம்!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி, நல்லூர் தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில்
“திராவிட சமத்துவம் பொங்கட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விளையாட்டு கபடி போட்டிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர். சி.வே.க. வெங்கடேசன் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர். சிவ. தியாகராஜன் செம்பியன்,கிளைச் செயலாளர், மாவட்ட, ஒன்றிய, சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைகட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக