நாகர்கோயில் அதிர்ச்சி – குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் தற்கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் கோட்டார் வாகையடி தெருவில் வசித்துவரும் செந்தில் என்பவரது மனைவி சந்தியா (25) புத்தாண்டு தினமான நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற இந்த தம்பதியருக்கு இடையில் சமீப நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்