பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 77 வது குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கவிதை போட்டி, குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இதில் தலைமை ஆசிரியர். விநாயகம்,ஆசிரியை பெருமக்கள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன், ஒன்றிய குழு உறுப்பினர். மனோகரன்,பள்ளி மேலான்மை குழு தலைவர். மணிமேகலை லிங்கநாதன்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது மக்கள் கலந்து கொன்டு விழாவை சிறப்பித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக