குற்றாலம் பேரூராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழா!!
தென்காசி மாவட்டம், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி துவக்கப் பள்ளியில் இன்று 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர். கணேஷ் தாமோதரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குற்றாலம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர். தங்கப்பாண்டியன் வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன் மற்றும் சின்னத்தம்பி குற்றாலம் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக