தவெக. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருது பாண்டியன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா – ரூ.1 லட்சம் மதிப்பில் பரிசுகள்!!
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தென்தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஆலங்குளம் ஊராட்சியில், தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலில் கழக பொதுச் செயலாளர் அவர்களின் ஆலோசனைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழாவை கொண்டாடினர். விழாவின் முக்கிய அம்சமாக, கலந்து கொண்ட அனைவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,
விழாவை திருப்பரங்குன்றம் தொகுதியின் மாவட்ட கழக செயலாளருமான திருநகர் M. மருதுபாண்டியன் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்தார். விழா ஏற்பாடு தென் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கதிர்வேல், இணை அமைப்பாளர் கண்ணன்.. பெரிய ஆலங்குளம் கிளைச் செயலாளர் செந்தில் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக