த.வெக. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர். மருது பாண்டியன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா – ரூ.1 லட்சம் மதிப்பில் பரிசுகள்!!
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடிவேல்கரை ஊராட்சியில், தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலில் கழக பொதுச் செயலாளர் அவர்களின் ஆலோசனைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழாவை கொண்டாடினர். விழாவின் முக்கிய அம்சமாக, கலந்து கொண்ட அனைவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டது.
விழாவை திருப்பரங்குன்றம் தொகுதியின் தளபதியாரின் உழைப்பாளியும், மாவட்ட கழக செயலாளருமான M. மருதுபாண்டியன் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்தார். அவருக்கு முன்னிலையில், மேற்கு ஒன்றிய செயலாளர் தலைவா செந்தில் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் M. ராஜேஷ், மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் V.S. தீபக், வடிவேல்கரை கிளை செயலாளர் P. வேல்முருகன், மேற்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் A. ஜெயகணேஷ், மேற்கு ஒன்றிய தொண்டரணி கிளை அமைப்பாளர் R. பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் கிளை நிர்வாகிகளான செந்தில், கௌதம், பிரபாகரன், நாகராஜ், டேனியல் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில் A. கண்ணன் மற்றும் இளங்குமார் ஆகியோர் நன்றியுரை வழங்கினர். இதில் வடிவேல்கரை கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நல பணிகளை பாராட்டி மகிழ்ச்சியுடன் விழாவை நிறைவு செய்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக