திண்டுக்கல்லில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள கொலை குற்றவாளியை காலில் சுட்டு பிடித்த போலீசார் - சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு!!
திண்டுக்கல்லை சேர்ந்த விக்னு (எ) விக்னேஸ்வரன்(31) இவர் மீது 15-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் விக்னு (எ) விக்னேஸ்வரன் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டுவதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
நகர் DSP.கார்த்திக் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் CKCM- காலனி பகுதியில் பதுங்கியிருந்த விக்னேஸ்வரனை பிடிக்க சென்றபோது விக்னேஸ்வரன் சார்பு ஆய்வாளர் ஜான்சனை அரிவாளால் வெட்டினார்.
உடனடியாக சுதாரித்த நகர் டிஎஸ்பி.கார்த்திக் தற்காப்புக்காக துப்பாக்கியால் விக்னேஸ்வரனின் காலில் சுட்டு பிடித்தார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக